`என் வாழ்நாள் உங்களுக்கானது'- நாட்டு மக்களுக்கு இங்கிலாந்து மன்னர் சார்லஸ் உருக்கமான உரை

`என் வாழ்நாள் உங்களுக்கானது'- நாட்டு மக்களுக்கு இங்கிலாந்து மன்னர் சார்லஸ் உருக்கமான உரை

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்றிரவு உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்தது. தாயார் எலிசபெத் மரணத்தையடுத்து இளவரசர் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னரானார். இந்நிலையில் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே தனது முதல் கன்னி உரை ஆற்றிய சார்லஸ், தனது தாயின் மரணம் நாட்டு மக்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்திருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு சேவையாற்ற இருக்கிறேன்.

நீங்கள் இங்கிலாந்தில் வசித்தாலும் அல்லது உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் உங்களது பின்னணியும் நம்பிக்கையும் எதுவாக இருந்தாலும் இதுவரை இருந்தது போல் என் வாழ்நாள் எல்லாம் உங்களுக்கு விசுவாசத்தோடும் மரியாதைடனும் அன்புடனும் சேவையாற்றுவேன். அதிக நேரம் ஒதுக்க முடியாது என்றாலும் அவற்றை நம்பிக்கைக்குரிய பிறர் பார்த்துக் கொள்வார்கள் என்றார்.

இதனிடையே, தனது மகனும் அரியணை வாரிசுமான வில்லியமுக்கு இதுவரை தன்வசம் இருந்த வேல்ஸ் இளவரசர் மற்றும் காண்பால் பிரபு ஆகிய பட்டங்களை சார்லஸ் வழங்கினார். தனது இளைய மகன் ஹரி மற்றும் அவரது மனைவி மேகனுக்கும் அன்பை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இங்கிலாந்து மன்னராக சார்லஸ் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணி அளவில் அதிகாரப்பூர்வமாக பிரகடனப்படுத்தப்படுகிறார். இங்கிலாந்து வரலாற்றில் முதல் முறையாக நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in