'என் ஹஸ்பண்ட் என்னை அடிச்சதால வயிற்றில் அடிபட்டிருக்கு': கர்ப்பிணியான சீரியல் நடிகை கதறி அழும் வீடியோ வைரல்

'என் ஹஸ்பண்ட் என்னை அடிச்சதால வயிற்றில் அடிபட்டிருக்கு': கர்ப்பிணியான சீரியல் நடிகை கதறி அழும் வீடியோ வைரல்

தன் காதல் கணவர் தன்னை அடித்து சித்ரவதை செய்ததால் தன் வயிற்றில் அடிபட்டிருப்பதாக கர்ப்பிணியான சீரியல் நடிகை கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னட சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். பெங்களூருச் சேர்ந்த இவர் சன்டிவியில் ஒளிபரப்பான ' கேளடி கண்மணி ' சீரியலில் நடிக்க ஆரம்பித்து 'மகராசி போன்ற தொடர்களில் நடித்தார். தற்போது 'செவ்வந்தி' தொடரில் நடித்து வருகிறார். ஏற்கெனவே திவ்யாவிற்கு திருமணமாகி 5 வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவரை விட்டுப் பிரிந்து சென்னை புரசைவாக்கத்தில் வாழ்ந்து வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த சீரியல் நடிகர் அர்னவ் என்ற நைனா முகமத். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'செல்லம்மா' தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார். திவ்யாவும், அர்னவ்வும் 'கேளடி கண்மணி' சீரியலில் சேர்ந்து நடித்தனர். அப்போது இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னாளில் அது காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே பல ஆண்டகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். மதம் மாறினால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று திவ்யாவிடம் அர்னவ் தொடர்ந்து வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், கடந்த பிப்ரவரி மாதம் திவ்யா மதம் மாறியுள்ளார். இதையடுத்து இருவரும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் ஒரு சீரியல் நடிகையுடன் அர்னவிற்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தன்னை ஊர் அறிய திருமணம் செய்ய வேண்டும் என்று அர்னவிடம் திவ்யா வலியுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் சசிநாதர் கோயிலில் மூன்று மாதங்களுக்கு முன் இந்து முறைப்படி நண்பர்கள் முன்னிலையில் திவ்யாவை ஆர்னவ் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திவ்யா கர்ப்பமடைந்துள்ளார். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு அவரை விட்டு அர்னவ் பிரிந்து சென்றுள்ளார்.

கர்ப்பிணியான நடிகை திவ்யா தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவர் கதறி அழுதுகொண்டே ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்," இண்டு வருடத்திற்கு முன்பு நாங்கள் இருவரும் சீரியல் ஒன்றில் சேர்ந்து நடித்தோம்.அதற்குப் பிறகு நாங்க லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் தான் வாழ்ந்து வந்தோம். இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு வீடு வாங்கினோம். அதற்கு பைனான்ஸ் நான் தான் செட்டில் செய்தேன். அப்போது, 'கல்யாணப்பரிசு' சீரியல் முடிந்த பிறகு அர்னாவ்க்கு எந்த ஒரு சீரியலும் இல்லாமல் தான் இருந்தார். நான் தான் 'மகராசி' சீரியல் முடிச்சுகிட்டு வீட்டுக்கான இஎம்ஐ கட்டிக்கிட்டு இருந்தேன். அதுமட்டுமின்றி அர்னாவ் தனியாக வாங்கிய லோனையும் நான் தான் கட்டியிருந்தேன். அவருக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். வேலை இல்லை என்பதை அவர் ஃபீல் பண்ணக் கூடாது என்பதற்காக நான் பார்த்து பார்த்து பண்ணுனேன். ஆனால், என் ஹஸ்பண்ட் என்னை அடிச்சதால நான் கீழே விழுந்ததில் என்னுடைய வயிறுக்கு அடிபட்டு இருக்கு. என்னுடைய காலில் அவர் மிதித்தத போது, அந்த பெண்ணுட லைவ்வில் தான் அவர் இருந்தார். அவளும் பொண்ணு தானே? இதன் பின் நான் மயங்கி விழுந்துட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு தான் நான் முழித்துப் பார்த்த போது அவர் அங்கு இல்லை. என்னால் ஹாஸ்பிடலுக்கு வர முடியவில்லை. வயிறு வலி வந்துடுச்சு. ப்ளீடிங் ஆகிவிட்டது" என்று வீடியோவில் திவ்யா கதறி அழுதபடியே கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக திவ்யா வழக்கறிஞர், காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை திவ்யா திருமணத்திற்குப் பின் சிக்கி சீரழிக்கப்பட்டு விட்டதாகவும், லவ் ஜிகாத்தால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சில இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த பிரச்சினை தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in