காதல் கணவருடன் பிரச்சினை; ஊருக்கு வருகிறேன்: தாயிடம் செல்போனில் பேசிய மகள் திடீர் தற்கொலை

தற்கொலை
தற்கொலைகாதல் கணவருடன் பிரச்சினை; ஊருக்கு வருகிறேன்: தாயிடம் செல்போனில் பேசிய மகள் திடீர் தற்கொலை

எனக்கும் கணவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. நான் நாளை ஊருக்கு கிளம்பி வருகிறேன் என்று பெற்றோருக்கு போன் மூலம் தகவல் சொன்ன இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், கண்ணனூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் ரித்திகா(23). இவர், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகில் உள்ள இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்வரைக் காதலித்து திருமணம் செய்தார். இந்தத் திருமணத்திற்கு ஆரம்பத்திலேயே ரித்திகாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் ரித்திகா, பெற்றோர் எதிர்ப்பையும் மீறியே கடந்த 2021-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் அஜித்குமாரைக் கைப்பிடித்தார். இதனால் ரித்திகாவின் குடும்பத்தினரும் அவரிடம் பேசாமல் இருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு கடந்த இருமாதங்களாகத்தான் ரித்திகாவின் தாய், தமிழரசி மட்டும் அவருடன் சமரசம் ஆகி அலைபேசி வழியே பேசிவந்தார். இந்தநிலையில் திடீரென தன் தாய் தமிழரசியைத் தொடர்புகொண்டு, ``எனக்கும் கணவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. நாளை நான் ஊருக்குக் கிளம்பி வருகிறேன்” எனச் சொன்னார்.

தமிழரசியும் மகளிடம், `ஊருக்கு வா. எதுவாக இருந்தாலும்இங்கே வந்து பேசிக்கொள்ளலாம்' என சமாதானப்படுத்திவிட்டு வைத்தார். இந்தநிலையில், நேற்று மாலை திடீரென தன் கணவர் வீட்டிலேயே ரித்திகா தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ரித்திகாவின் தாய் கொடுத்தப் புகாரின் பேரில், களக்காடு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in