ஹெல்மெட் அணிந்து தான் வேலை செய்ய வேண்டும்: கதறும் மின்வாரிய ஊழியர்கள்

ஹெல்மெட் அணிந்து வேலை செய்யும் ஊழியர்கள்.
ஹெல்மெட் அணிந்து வேலை செய்யும் ஊழியர்கள்.ஹெல்மெட் அணிந்து தான் வேலை செய்ய வேண்டும்: கதறும் மின்வாரிய ஊழியர்கள்

உத்தரப்பிரதேசத்தில் அரசு அலுவலகத்தில் ஹெல்மெட் அணிந்த நிலையில் ஊழியர்கள் வேலை செய்து வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாத இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இங்கு வேலை செய்யும் மின்வாரிய ஊழியர்கள், தலையில் ஹெல்மெட் அணிந்த நிலையில், கோப்புகளைப் பார்க்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். எப்போது வேண்டுமானாலும் கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் எங்கள் தலையைப் பாதுகாக்க ஹெல்மெட் அணிந்து வேலை செய்கிறோம் என்று ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த கட்டிடத்தின் நிலை குறித்து நாங்கள் பலமுறை உரியவர்களிடம் தெரிவித்தோம், ஆனால் யாரும் இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒருவேளை, பழுதுபார்க்கும் முன் எங்களில் சிலர் இறந்து போகலாம் என்று கவலையுடன் அவர்கள் தெரிவித்தனர். ஹெல்மெட் அணிந்து அரசு ஊழியர்கள் வேலை செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in