
மத்திய பிரதேச மாநிலம் கந்த்வாவில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிடாததற்காக 10 வயது முஸ்லிம் சிறுவனை தெருவில் வைத்து தாக்கியதாக 22 வயது இளைஞன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் கந்த்வாவில் 10 வயது முஸ்லிம் சிறுவனை தாக்கியதாக 22 வயது வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டியூஷன் வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்த 5-ம் வகுப்பு மாணவனைத் தடுத்து நிறுத்திய அந்த இளைஞன், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிடும்படி வற்புறுத்தியதாகவும், சிறுவன் கோஷமிடாத காரணத்தால் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.