வேலைக்கு தாமதமாக வந்ததால் பணி நீக்கம்; சூப்பர்வைசர் மீது கொலைவெறி தாக்குதல்: ஊழியர்கள் 3 பேர் கைது

சூப்பர் வைசரைத் தாக்கும் சிசிடிவி காட்சி
சூப்பர் வைசரைத் தாக்கும் சிசிடிவி காட்சிபணி நீக்கம் செய்த சூப்பர்வைசர் மீது கொலைவெறி தாக்குதல்; 3 பேர் கைது

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்த ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆத்திரத்தில் கூட்டாளிகளுடன் சேர்ந்து மேற்பார்வையாளரை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் வண்ணாரப்பேட்டையில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் பணிக்கு குறித்த நேரத்திற்கு வராதது குறித்து மேற்பார்வையாளர் கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதுகுறித்து மேற்பார்வையாளர் கடை உரிமையாளரிடம் புகார் அளித்ததன் பேரில் பாஸ்கரனை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் நேற்று இரவு பாஸ்கரன் தனது கூட்டாளிகளாக ரஞ்சித்குமார், கார்த்திக் ஆகியோருடன் சேர்ந்து, மேற்பார்வையாளர் ரகுபதி பணி முடிந்து வீடு திரும்பும் போது கடையின் வாயிலில் வைத்து கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட பாஸ்கரன், ரஞ்சித், கார்த்திக்
தாக்குதலில் ஈடுபட்ட பாஸ்கரன், ரஞ்சித், கார்த்திக்பணி நீக்கம் செய்த சூப்பர்வைசர் மீது கொலைவெறி தாக்குதல்; 3 பேர் கைது

இது அந்த கடையின் வாயிலில் இருந்த சிசிடிவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து தாக்குதலுக்கு உள்ளான மேற்பார்வையாளர் ரகுபதி வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் கார்த்திக், ரஞ்சித், பாஸ்கர் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in