அம்மிக்கல்லைப் போட்டு பெண் கொலை: துபாயில் இருப்பவர் சாட்சி சொல்ல சென்னை வருகிறார்

மனைவியைக் கொலை செய்த ஆலன்.
மனைவியைக் கொலை செய்த ஆலன்.அம்மிக்கல்லைப் போட்டு பெண் கொலை: துபாயில் இருப்பவர் சாட்சி சொல்ல சென்னை வருகிறார்

அம்மிக்கல்லைப் போட்டு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாட்சி சொல்ல வராமல் துபாயில் இருந்த பெண்ணை, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சென்னைக்கு வரவழைக்க போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.

சென்னை நெற்குன்றம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆலன்(51). இவருக்கு லட்சுமி(45) என்ற மனைவியும், ஆனந்த், வினோத், சுதா என்ற மூன்று பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் மூவரு்க்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். வீடு, வீடாக தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழிலில் ஆலன் ஈடுபட்டு வந்தார்.

மதுபோதைக்கு அடியான அவர், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் குடித்து விட்டு வந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி போதையில் வீட்டிற்கு வந்த ஆலன், மனைவி லட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து லட்சுமியின் தலையில் போட்டுக் கொலை செய்தார். இதன் பின் கோயம்பேடு காவல்நிலையம் சென்று நடந்த சம்பவத்ததை கூறி ஆலன் சரண்டைந்தார்.

இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து ஆலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லட்சுமி கொலை வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட அவரது தம்பி மனைவி செல்வி நீதிமன்றத்திற்கு சாட்சியளிக்க வராமல் வெளிநாட்டில் இருந்து வந்தார். இதனால் இவ்வழக்கில் தொய்வு ஏற்பட்டது.

இதனால் செய்வதறியாது திகைத்த கோயம்பேடு காவல்துறையினர் நீண்டகாலப் போராட்டத்திற்கு பிறகு செல்வியை துபாயில் இருந்து வரவழைக்க ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி ஜன.29-ம் தேதி துபாயில் இருந்து சென்னை வரும் செல்வியை போலீஸார் நீதிமன்றத்தில் சாட்சியாக விசாரணைக்கு ஆஜர்படுத்த உள்ளனர். போலீஸாரின் இந்த முயற்சியை நீதிமன்ற அரசு வழக்கறிஞர் பாராட்டியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in