கண்ணில் மிளகாய் பொடி தூவி தங்கை, மைத்துனர் கொலை: சொத்துக்காக அண்ணன் கொடூர செயல்

கண்ணில் மிளகாய் பொடி தூவி தங்கை, மைத்துனர் கொலை: சொத்துக்காக அண்ணன் கொடூர செயல்

சொத்துக்காக தன்னுடைய தங்கையையும், அவரது கணவரையும் அண்ணனே படுகொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி, அண்ணாநகரை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில் கடந்த ஆண்டு பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்துள்ளனர். தங்கை மற்றும் மைத்துனர் ஆகியோருக்கு வாரிசு இல்லாததால் அவர்களின் சொத்து தனக்கு கிடைக்கும் மாரியம்மாளின் அண்ணன் முருகேசன் இருந்து ஆசை ஆசையாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், பெண் குழந்தையை தங்கை தடுத்தெடுத்ததால் முருகேசன் ஆத்திரம் அடைந்துள்ளார். இதனால், தங்கையும், அவரது கணவரையும் கொல்ல முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் முருகேசன் தனது மகன் மகேஷுடன் தங்கை மாரியம்மாள் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த மாரியம்மாளின் கண்ணிலும், அவரது கணவர் ராம்குமாரின் கண்ணிலும் மிளகாய் பொடியை தூவிவிட்டு அரிவால் வெட்டி கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்து தந்தையும், மகனும் தப்பிச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பியோடிய தந்தை, மகனை தேடி வருகின்றனர்.

சொத்துக்காக தனது உடன் பிறந்த சகோதரியையும் அவரது கணவரையும் அண்ணன் படுகொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in