சென்னையில் விசிக நிர்வாகி வெட்டிக்கொலை: அண்ணன் மகன்கள் வெறிச்செயல்

கொலை செய்யப்பட்ட அதீஷ்
கொலை செய்யப்பட்ட அதீஷ்சென்னையில் விசிக நிர்வாகி வெட்டிக்கொலை: அண்ணன் மகன்கள் வெறிச்செயல்

சென்னை குன்றத்தூரில் சொத்து தகராறு காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குன்றத்தூர் தரப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அதீஷ்(29). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அதீஷ் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆலந்தூர் தொகுதி துணை அமைப்பாளராக இருந்து வந்தார்.

இவருக்கும், இவரதுஅண்ணன் மகன்களுக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக அடிக்கடி குடும்பச்சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு வழக்கம் போல் அதீஷிடம் அவரது அண்ணன் குமரேசன் மகன்களான சுனில்(21), சுகாஷ்(25) ஆகியோர் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சுனில், சுகாஷ் ஆகிய இருவரும் அதீஷ் மற்றும் அவரது அண்ணன் சுகுமார், முரளி ஆகிய மூன்று பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதில் படுகாயமடைந்த மூன்று பேரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதில் அதீஷ் மருத்துவமனை செல்லும் வழிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் குன்றத்தூர் போலீஸார், அதீஷ் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய சுனில் ,சுகாஷ் ஆகிய இருவரை போலீஸார் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in