சைடிஷ் வாங்கித் தராததால் ஆத்திரம்: சக நண்பர்களால் தீர்த்துக் கட்டப்பட்ட ரவுடி !

சைடிஷ் வாங்கித் தராததால் ஆத்திரம்: சக நண்பர்களால் தீர்த்துக் கட்டப்பட்ட ரவுடி !

மது அருந்தும் போது சைடிஷ் வாங்கிக் கொடுக்க மறுத்த ரவுடியை சக நண்பர்களே வெட்டிக் கொன்றுள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், தொட்டிக்கலை பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி வேலு. இவர் அப்பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் தனது நண்பர்களான கோகுல், ஸ்டாலின், செல்வா ஆகியோருடன் நேற்று ஒன்றாக மது அருந்தியுள்ளார். அப்போது சைடிஷ் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மூவரும் சேர்ந்து வேலுவை அருகில் உள்ள கடையில் சைடிஷ் வாங்கி தரக்கோரிக் கேட்டுள்ளனர். அதற்கு வேலு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மூவரும் அவரை தரக்குறைவாகப் பேசியுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த வேலு அவர்களை அடிக்க தொடங்கியுள்ளார். போதையிலிருந்த நண்பர்கள் மூவரும் ஆத்திரம் அடைந்த நிலையில் வேலுவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர்.

வேலு.
வேலு.

கொலை செய்யப்பட்ட ரவுடி வேலு மீது, ஏற்கனவே வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதேபோன்று கொலை செய்த செல்வா என்பவர் மீதும் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகச் செல்வா எப்போதுமே கத்தியுடன்தான் வெளியே செல்வார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட வேலு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக வில்லிவாக்கம் பகுதியில் நண்பர்களுடன் இணைந்து அப்பகுதியில் இரண்டு கொலைகளைச் செய்துள்ளார். ஜாமீனில் வந்த வேலு, ரவுடி தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். திருவள்ளூர் அடுத்த தொட்டிக்கலையில் தனது தாயாருடன் வாடகை வீட்டில் தங்கி இருக்கும் அவர் வெல்டிங் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள். கொலைக்குப் போதைதான் காரணமா, முன்விரோதம் காரணமா என செவ்வாப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in