தலையைத் துண்டித்து ரவுடி கொலை; வயற்காட்டில் வீசப்பட்ட உடல்: ராமநாதபுரத்தில் பரபரப்பு

தலையைத்  துண்டித்து ரவுடி கொலை; வயற்காட்டில் வீசப்பட்ட உடல்: ராமநாதபுரத்தில் பரபரப்பு

ராமநாதபுரத்தில் தலையைத் துண்டித்து ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே செங்கமடையச் சேர்ந்தவர் பாண்டி என்ற முத்துப்பாண்டி. இவர் மீது 3 கொலை வழக்குகளும், பல்வேறு கொள்ளை வழக்குகளும் உள்ளன. அத்துடன் ரவுடிகளின் பட்டியிலும் இவரது பெயர் இடம் பெற்றிருந்தது.

நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற முத்துப்பாண்டி அதன் பின் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் முத்துப்பாண்டியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், செங்கமடை கிராமத்தின் வயற்காட்டுப் பகுதியில் தலை துண்டிக்கப்பட்டவாறு 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடப்பதாக திருவாடனை போலீஸாருக்குத் தகவல் கிடைத்து.

சம்பவ இடத்திற்கு விரைந்து போலீஸார் அங்கிருந்த உடலை மீட்டனர். தலை துண்டிக்கப்பட்டுக் கிடந்தது ரவுடி முத்துப்பாண்டி என்பது தெரிய வந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். ரவுடி முத்துப்பாண்டியின் தலையைத் துண்டித்து கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in