வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் 20 மாத குழந்தைக்கு நடந்த கொடூரம்: பக்கத்து வீட்டுக்காரர் கைது

வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் 20 மாத குழந்தைக்கு நடந்த கொடூரம்: பக்கத்து வீட்டுக்காரர் கைது

மத்திய மும்பை பகுதியில் 20 மாத பெண் குழந்தையை, பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளதாக போலீஸார் இன்று தெரிவித்தனர்.

மத்திய மும்பையைச் சேர்ந்த 20 மாத குழந்தையின் பெற்றோர்கள் தங்கள் பக்கத்து வீட்டுக்காரர் மீது புகார் அளிக்க காவல்துறையை அணுகிய பின்னர் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்தப் புகாரின்படி, குழந்தையின் குடும்பம் ஒரு குடியிருப்பில் வசிக்கிறது என்றும், அவர்களின் 35 வயதான பக்கத்து வீட்டுக்காரர் சில நாட்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டில் இல்லாதபோது குறுநடை போடும் அக்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளனர்.

இந்த கொடூரத்துக்குப் பின்னர் குழந்தை தொடர்ந்து அழுது, வலியால் துடித்தபோது ஏதோ தவறு இருப்பதை பெற்றோர் உணர்ந்தனர் என்று அந்த போலீஸ் அதிகாரி கூறினார். இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் மீது போக்சோ மற்றும் ஐபிசி சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in