142 அடியை எட்டியது முல்லை பெரியாறு அணை: இடுக்கி மாவட்டத்திற்கு இறுதி கட்ட எச்சரிக்கை!

142 அடியை எட்டியது முல்லை பெரியாறு அணை: இடுக்கி மாவட்டத்திற்கு இறுதி கட்ட எச்சரிக்கை!

முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியதால்  விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2014-ல் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 5-வது முறையாக 142 அடியை எட்டியது.
இதனை தொடர்ந்து  இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில்   தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  இந்தநிலையில் அணையின் நீர்மட்டம் இன்று காலை 10 மணி நிலவரப்படி 142 அடியாக  உள்ளது.

அணைக்கு  762 அடி கன அடி நீர்வரத்து  வருகிறது.  அணையில் இருந்து தமிழக பகுதிக்கு  திறக்கப்படும் நீரின் அளவு 750 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.  இடுக்கி மாவட்டத்திற்கு இறுதி கட்ட  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 142 அடி எட்டிய நிலையில் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை  பொதுப்பணித்துறை அதிகாரிகளால்  விடுக்கப்பட்டு உள்ளது. 142 அடியை தேக்கிய பின், தமிழக பகுதிகளுக்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளதால் அதிகாரிகள் தொடர்  கண்காணிப்பில் உள்ளனர். 5-வது முறையாக, 142 அடி தண்ணீர்  தேக்கப்பட்டுள்ளதால்,  விவசாயிகளிடம்  மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in