இளைஞரின் உயிரைப் பறித்த கார் மின்விசிறி: பழுதான மின்விசிறியை மாற்றியபோது நடந்த விபரீதம்

இளைஞரின் உயிரைப் பறித்த கார் மின்விசிறி: பழுதான மின்விசிறியை மாற்றியபோது நடந்த விபரீதம்

வீட்டில் உள்ள மின்விசிறி பழுதான காரணத்தால் காரில் பயன்படுத்தும் மின்விசிறியைப் பொருத்திய வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

தாம்பரம் அடுத்துள்ள முடிச்சூர் தெற்கு லட்சுமி நகர் பதியைச் சேர்ந்தவர் சந்திரன்(50). மனைவி பானு மன்றும் மூன்றாவது மகன் பாபு ஆகியோருடன் வசித்துவருகிறார். ஐடிஐ முடித்த பாபு பெருங்களத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். வீட்டிலிருந்த மின்விசிறி பழுதடைந்தநிலையில் அதைச் சரி செய்வதற்குப் பதிலாக காரில் பயன்படுத்தப்படும் சிறிய ரக மின் விசிறியைத் தற்காலிகமாகப் பொருத்த முயன்றுள்ளார். அப்போது அந்த மின்விசிறிக்கு மின் இணைப்பு கொடுக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார் பாபு.

அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பாபு உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த பெருங்களத்தூர்-பீர்ச்சங்கரணை போலீஸார் பாபுவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காகக் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல் துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in