அடர்ந்த காடு... 70 கிமீ தூரம் பயணம்: 40 ரூபாய் கொடுத்து சிகிச்சை பெறும் தோனி!

அடர்ந்த காடு... 70 கிமீ தூரம் பயணம்: 40 ரூபாய் கொடுத்து சிகிச்சை பெறும் தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, சாதாரண மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருவது அவரது ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் தல என்று அழைக்கப்படும் எம்.எஸ்.தேனி, கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக இருந்து வருகிறார். ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாடியதால் தோனிக்கு மூட்டுவலி ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர், சாதாரண மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வரும் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள லாபியூவ் என்ற அடர்ந்த காட்டில் வசித்து வரும் வென்டில் சிங் கேர்வால் என்ற ஆயுர்வேத மருத்துவர், தோனிக்கு சிகிச்சை அளித்து வருகிறார். மருத்துவ கட்டணமாக 20 ரூபாயும், மருந்து கட்டணமாக 20 ரூபாயும் மருத்துவர் வாங்கியுள்ளார். இது குறித்து கேர்வால் கூறுகையில், தன்னிடம் சிகிச்சை பெற்ற தோனியின் பெற்றாேர் தற்போது நலமாக இருப்பதாகவும், கால்சியம் குறைபாடு காரணமாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு வரும் தோனியும் தன்னிடமே சிகிச்சை பெற்று வருவதாகவும், எந்த ஆடம்பரமும் இல்லாமல் சாதாரண நோயாளி போல் வரும் தோனி, இதற்காக 4 நாட்களுக்கு ஒருமுறை 70 கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்து தன்னிடம் சிகிச்சை பெற்று செல்கிறார் என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in