குமரியைத் தாண்டாத பைக்குக்கு அபராதம் விதித்த கேரள போலீஸ்: எஸ்எம்எஸ்ஸால் பதறிய வாலிபர்

குமரியைத் தாண்டாத பைக்குக்கு அபராதம் விதித்த கேரள போலீஸ்: எஸ்எம்எஸ்ஸால் பதறிய வாலிபர்
குமரியைத் தாண்டாத பைக்குக்கு அபராதம் விதித்த கேரள போலீஸ்: எஸ்எம்எஸ்ஸால் பதறிய வாலிபர்

கன்னியாகுமரி மாவட்டத்தையே தாண்டாத மோட்டார் சைக்கிளுக்கு, கேரளத்தில் ஒரே வாகனத்தில் மூவர் பயணித்ததாக அம்மாநில போலீஸாரால் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது. இவர் குமரி மாவட்டம், கருங்கல் பகுதியில் செருப்புக் கடை வைத்துள்ளார். கேரளத்தில் டூவீலரில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் போட வேண்டும் என்பது கட்டாயம். இந்தநிலையில் இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி கேரள மாநில போலீஸாரால் அனுப்பப்பட்டது.

அதில் கேரள மாநிலம், நெட்டா பகுதியில் நீங்கள் ஒரே பைக்கில் மூவர் பயணித்து விதிமீறலில் ஈடுபட்டு உள்ளீர்கள். அதில் பின்னால் இருந்த இருவரும் ஹெல்மெட் அணியவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. இதற்காக 1500 ரூபாய் ஷாகுல் ஹமீதுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்ததும் ஷாகுல் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக செயற்கை நுண்ணறிவுக் கேமராவில் மூவர் செல்லும் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படமும் அவருக்கு அனுப்பப்பட்டு இருந்தது.

ஷாகுல் ஹமீதுவின் மோட்டார் சைக்கிள் குமரி மாவட்டமே தாண்டியது இல்லை. மேலும், ஷாகுல் ஹமீது ஹோண்டா ஷைன் ரக பைக் வைத்துள்ளார். போலீஸார் அபராதம் விதித்து அனுப்பியுள்ள பைக்கில் யமஹா எப் இசட் என வந்துள்ளது. இதனால் ஷாகுல் ஹமீது தன் வாகன எண்ணை போட்டு கேரளத்தில் போலியாக யாரோ பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

குமரியைத் தாண்டாத மோட்டார் சைக்கிளுக்கு கேரளத்தில் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in