`அவரிடம் இருக்காதே, அவரை நம்பாதே'- தற்கொலைக்கு முன் மகனுக்கு வாட்ஸ்அப்பில் உருக்கமான ஆடியோ அனுப்பிய தாய்

`அவரிடம் இருக்காதே, அவரை நம்பாதே'- தற்கொலைக்கு முன் மகனுக்கு வாட்ஸ்அப்பில் உருக்கமான ஆடியோ அனுப்பிய தாய்

தற்கொலைக்கு முன் தனது மகனுக்கு வாட்ஸ்அப்பில் தாய் உருக்கமான ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டை அருகே உள்ள கருதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது கணவர் பாண்டியன். இவர்களுக்குள் அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனிடையே, கணவருடன் ஏற்பட்ட தகராறில் வேதனையடைந்த மகேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மகேஸ்வரி இறப்பதற்கு முன் தன் மகனுக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் பேசும் மகேஸ்வரி, மன்னிச்சிருப்பா, நான் சாகப் போகிறேன். தம்பியை பத்திரமா பாத்துக்கோ. உன்னை நம்பித்தான் தம்பியை விட்டுட்டு போகிறேன். அப்பாவிடம் இருக்காதே. அப்பாவை நம்பாதே. நான் சாகுவதற்கு காரணமே அப்பா தான்டா. என்னை மன்னித்துவிடு. வேறு வழி இல்லடா. நல்லா படிடா. யாருக்கும் தொல்லை கொடுக்காதடா" என்று கண்ணீர் மல்க பேசி இருக்கிறார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in