தொழிலாளியை அடித்துக் கொலை செய்த குடும்பம்: திருட்டு பைக்கை விற்றதால் ஆத்திரம்

தொழிலாளியை அடித்துக் கொலை செய்த குடும்பம்: திருட்டு பைக்கை விற்றதால் ஆத்திரம்

தூத்துக்குடியில் தொழிலாளி கொலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் என மூவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சின்னகண்ணுபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(45). தொழிலாளியான இவர் நேற்று மாலை கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், பைக் விற்பனை தொடர்பான முன்விரோதத்தில் இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட ஜெயக்குமார், குறிஞ்சி நகரைச் சேர்ந்த முருகன்(56) என்பவரது மகன் சரவணனுக்கு(25) மோட்டார் சைக்கிள் ஒன்றை விற்றுள்ளார். 5000 ரூபாய்க்கு அந்த பைக்கை சரவணன் வாங்கினார். இந்நிலையில் அது திருட்டு பைக் என்பது தெரியவந்தது. அந்த பைக்கை அதன் உண்மையான உரிமையாளர் சரவணனிடம் இருந்து பறித்துச் சென்றனர். இதனால் நேற்று மாலை ஜெயக்குமாரை சந்திக்கச் சென்ற சரவணன், அவரது தந்தை முருகன், தாய் பொன் வைரவி ஆகியோர் இதுதொடர்பாக பிரச்சினை செய்தனர்.

அப்போது வாக்குவாதம் முற்றியது. இதில் கோபமடைந்த மூவரும் சேர்ந்து ஜெயக்குமாரைத் தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இதைத் தொடர்ந்து போலீஸார் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த மூவரையும் கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், “திருட்டு பைக்கைக் கொடுத்த ஆத்திரத்தில் தாக்கினோம். அவரைக் கொல்ல வேண்டும் என்னும் நோக்கத்தில் அடிக்கவில்லை. அது எதிர்பாராமல் நடந்துவிட்டது.”எனத் தெரிவித்தனர். கொலை வழக்கில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in