கேரளாவிற்கு டூவீலரில் கஞ்சா கடத்தல்: தாய், மகன், மகள் கைது

கேரளாவிற்கு டூவீலரில் கஞ்சா கடத்தல்: தாய், மகன், மகள் கைது

கம்பத்திலிருந்து கேரளாவுக்கு இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கொண்டு சென்ற தாய், மகள், மகன் ஆகியோர் போலீஸாரிடம் சிக்கினர். 

தேனி மாவட்டம்  கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தப்பட உள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்படி, கம்பம் வடக்கு போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது 2 பெண் உள்பட 3 பேர் வந்த இரு சக்கர வாகனத்தை போலீஸார் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனால், சந்தேகமடைந்த போலீஸார் அவர்கள் வைத்திருந்த பையைச் சோதனையிட்டனர்.

அதில் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவை கடத்தியது கம்பம் குரங்குமாயன் தெரு பாண்டியராஜன் மனைவி லதா(40), மகள் அபர்ணா (22), மகன் ஜெயக்குமார் (19),  ஆகியோர் எனத் தெரிந்தது. இரு சக்கர வாகனம் மூலம் கஞ்சா பண்டலை கேரளாவுக்கு கடத்த முயன்றதும், லதா, ஜெயக்குமார் மீது ஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. மூன்று கிலோ கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in