ஒரு வாரத்துக்கு பின் உயிருடன் தாய், மகள் மீட்பு: துருக்கியில் நெஞ்சை உருகவைத்த வீடியோ

உயிருடன் தாய், மகள் மீட்பு
உயிருடன் தாய், மகள் மீட்புஒரு வாரத்துக்கு பின் உயிருடன் தாய், மகள் மீட்பு: துருக்கியில் நெஞ்சை உருகவைத்த வீடியோ
Updated on
1 min read

துருக்கியில் இடிபாடுகளில் சிக்கி ஒரு வாரமாக தவிர்த்து வந்த தாய் மற்றும் மகளை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அனைவரின் நெஞ்சை உருகவைத்துள்ளது.

துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து நடந்த நிலநடுக்கத்தால் பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தூக்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதே நேரத்தில் பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிர் தப்பி மீட்கப்பட்டு வருகின்றனர். துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இந்த உயிரிழப்பு 50 ஆயிரத்தை தொடும் என்று ஐநா கவலை தெரிவித்து இருக்கிறது.

ஒரு வாரத்துக்கு பின் உயிருடன் தாய், மகள் மீட்பு
ஒரு வாரத்துக்கு பின் உயிருடன் தாய், மகள் மீட்பு

மீட்பு பணிகளில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இடிபாடுகளில் ஒரு வாரமாக சிக்கி தவித்த தாயும், மகளையும் மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர். எல்சால்வடாரைச் சேர்ந்த மீட்பு குழுவினர் தாய், மகள் மீட்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர். காரன்மடாஸ் எந்த பகுதியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்த இருவரும் மீட்கப்படும் காட்சியும் இதில் இடம் பெற்று இருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு வாரத்துக்கு பிறகு தாயும், மகளும் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அனைவரின் நெஞ்சை உருகவைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in