ஒடிசாவில் 2 மகள்களை ஆண் நண்பருக்கு இரையாக்கிய தாய்: சென்னைக்கு கடத்தும் போது சிக்கினார்!

பெல்பஹார் போலீஸ் ஸ்டேஷன்.
பெல்பஹார் போலீஸ் ஸ்டேஷன்.ஒடிசாவில் 2 மகள்களை ஆண் நண்பருக்கு இரையாக்கிய தாய்: சென்னைக்கு கடத்தும் போது சிக்கினார்!
Updated on
1 min read

ஒடிசாவில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட 2 சிறுமிகளை ரயில் நிலையத்தில் போலீஸார் மீட்டனர். இதுதொடர்பாக அந்த சிறுமிகளின் தாயும், அவரது ஆண் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகளான 2 சிறுமிகள் சென்னைக்கு கடத்தப்படுவதாக பெல்பஹார் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பல்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் நேற்று இரவு கடத்தப்பட இருந்த 2 சிறுமிகளையும் போலீஸார் மீட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்களது தாயும், அவரது ஆண் நண்பரும் தங்களை சென்னைக்கு கடத்த முயன்றதாக புகார் கூறினர். அத்துடன் அவர்கள் இருவரும் தங்களைத் தொடரந்து சித்ரவதை செய்தனர் என்று கூறினர். அத்துடன் தாயின் ஆண் நண்பர், தங்கள் இரண்டு பேரையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினர்.

இதையடுத்து அந்த 2 சிறுமிகளையும் சைல்டு லைனிடம் போலீஸார் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த சிறுமிகள் குழந்தைகள் நலக்குழுவில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் நடத்திய விசாரணையில், தாயும், அவரது நண்பரும் சிறுமிகளை சித்ரவதை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாகபிரஜராஜ்நகர் எஸ்டிபிஓ சிந்தாமணி பிரதான் கூறுகையில், கடத்தல் சம்பவம் தொடர்பாக பெல்பஹார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமிகளின் தாய், அவரது ஆண் நண்பரை கைது செய்துள்ளனர். காப்பாற்றப்பட்ட சிறுமிகளின் வாக்குமூலங்கள் ஒரு பெண் அதிகாரி முன்னிலையில் பதிவு செய்யப்படும். இதையடுத்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப்படும். விசாரணை முடிந்ததும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ஒடிசாவில் இருந்து சென்னைக்கு எதற்காக சிறுமிகள் கடத்தப்பட இருந்தனர் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஜார்சுகுடா மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in