சீனாவில் இருந்து மதுரை வந்த தாய், மகளுக்கு கரோனா

சீனாவில் இருந்து மதுரை வந்த தாய், மகளுக்கு கரோனா

சீனாவில் இருந்து மதுரை வந்த விருதுநகரைச் சேர்ந்த தாய், மகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி தமிழக மருத்துவமனைகளில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், உதவியாளர்களுக்கு கரோனா வார்டில் அனுமதி இல்லை என்றும் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அத்துடன் தமிழகத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ மாணவர்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், மருத்துவக் கல்லூரிகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், உதவியாளர்கள் மாஸ்க் அணிந்து கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், உதவியாளர்களுக்கு கரோனா வார்டுக்குள் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் காய்ச்சல் பரிசோதனை செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் 2 சதவீதம் பேருக்கு ரேண்டமாக பரிசோதனை செய்யும் பணி டிச.24-ம் தேதி முதல் விமான நிலையங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த இருவருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில்," விருதுநகரைச் சேர்ந்த தாய், மகள் ஆகிய 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இரண்டு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in