கோட்டா நகரில் அதிகரிக்கும் தற்கொலைகள்! கதறும் மாணவர்கள்!

தற்கொலைகளை தடுக்க, கோட்டா பயிற்சி மையங்களில் கம்பி வலைத் தடுப்புகள்
தற்கொலைகளை தடுக்க, கோட்டா பயிற்சி மையங்களில் கம்பி வலைத் தடுப்புகள்

நீட் நுழைவுத்தேர்வுக்காக கோட்டா நகரில் தங்கி பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் கடுமையான மன அழுத்தத்தில் தவிப்பதாக, அங்கே அரசு மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. நீட் நுழைவுத் தேர்வை ஆதரிப்போர், தமிழகத்தில் மட்டுமே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு நிலவுவதாகவும், தற்கொலைகள் நடப்பதாகவும் குற்றம் சாட்டுவார்கள்.

ஆனால், தமிழ்நாட்டுக்கு வெளியே குறிப்பாக வட மாநிலங்களில் நீட் மரணங்கள் ஆண்டுதோறும் உயர்ந்து வருகின்றன. அவற்றிலும் குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரில் இயங்கும், நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடப்பாண்டு மாணவர் தற்கொலைகள் அதிகரித்துள்ளன.

தற்கொலையில் தள்ளும் மன அழுத்தம்
தற்கொலையில் தள்ளும் மன அழுத்தம்

கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குள் கோட்டாவில் 23 மாணவ மாணவியர் தற்கொலை செய்துகொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்தியதில், கிட்டத்தட்ட அங்கு தங்கிப் பயிலும் மாணவ மாணவியர் அனைவருமே மன அழுத்தத்தில் தவிப்பதும், அதில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய அளவுக்கு மோசமாக இருப்பதும் தெரிய வந்தது.

இந்தியாவின் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் நிறைந்திருக்கும் கோட்டாவில், தற்போது 2.5 லட்சத்துக்கும் மேலான மாணவ மாணவியர் இங்கே தங்கி நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

மருத்துவ உயர்கல்வியில் சேர்வதற்கான நீட் தேர்வு மட்டுமன்றி, ஐஐடி பொறியியல் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்யும் பயிற்சியகங்களும் இங்கே நிறைந்திருக்கின்றன. முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்பகுதியில் தற்கொலைகள் அதிகரித்ததை தொடர்ந்து, வாராந்திர தேர்வுகளுக்கு கோட்டா மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

தற்கொலையில் தள்ளும் மன அழுத்தம்
தற்கொலையில் தள்ளும் மன அழுத்தம்

அப்படியும் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு, இந்த வருடத்தின் பலி எண்ணிக்கையை இதுவரை 26 என்பதாக உயர்த்தி உள்ளன. 2 மாத இடைவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வார இறுதி தேர்வுகள் அங்கே மீண்டும் தொடங்கியுள்ளன.

பயிற்சி மையங்கள் மற்றும் மாணவர் தங்கும் விடுதிகள் அனைத்திலும் மாணவர் மத்தியிலான தற்கொலை முனைப்பை தடுக்க, உயரமான இடங்களின் அருகே வலைகள் கட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அப்படியும் தற்கொலை எண்ணிக்கைகள் அதிகரிப்பதும், அங்கு தங்கிப் பயிலும் மாணவ மாணவியரில் பெரும்பாலானோர் மன அழுத்தத்தில் தவிப்பதும், கோட்டா விவகாரத்தில் மாநில அரசு மற்றும் அதிகாரிகளை தடுமாறச் செய்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in