‘பிரதமரிடம் இப்படிப் பேசுங்கள்’ - சிகிச்சை பெறுபவர்களிடம் அறிவுறுத்தப்பட்டதாகப் புகார்

குஜராத் தொங்கு பால விபத்து விவகாரத்தில் அடுத்தடுத்து வெடிக்கும் சர்ச்சைகள்
‘பிரதமரிடம் இப்படிப் பேசுங்கள்’ -  சிகிச்சை பெறுபவர்களிடம் அறிவுறுத்தப்பட்டதாகப் புகார்

தொங்கு பால விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களைச் சந்திக்க பிரதமர் மோடி செல்லவிருக்கும் நிலையில், அவரிடம் என்ன பேச வேண்டும் என அவர்களில் சிலருக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள தொங்கு பாலம், கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுந்து விழுந்த விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மீட்கப்பட்டவர்களில் பலர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூற பிரதமர் மோடி அங்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அம்மருத்துவமனையை அவசர அவசரமாகப் பழுதுபார்க்கும் வேலைகள் நேற்று இரவு நடந்தன. இதற்காக ஏறத்தாழ 40 பெயின்டர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், கழிப்பறைகளில் புதிய டைல்ஸ் பொருத்தப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜாம்நகர் மருத்துவமனையிலிருந்து படுக்கை விரிப்புகள் கொண்டுவரப்பட்டு மோர்பி மருத்துவமனை படுக்கைகளில் விரிக்கப்பட்டதாகவும், தரைத்தளத்தில் இருந்த வார்டு முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இதைக் கடுமையாக விமர்சித்தன.

இந்நிலையில், தொங்கு பால விபத்தில் மீட்கப்பட்டு அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களிடம், பிரதமர் மோடி வரும்போது என்ன பேச வேண்டும் எனச் சொல்லித்தரப்பட்டதாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன. இதற்காக, சிகிச்சை பெறுபவர்களில் குறிப்பிட்ட சிலர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக என்டிடிவி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in