20 ஆயிரத்திற்காக சிக்கன் கடைக்காரர் கொலை: கடன் கொடுத்த நண்பர் கைது

ஏஜேஸ்.
ஏஜேஸ்.

20 ஆயிரம் கடனுக்காக சிக்கன் கடைக்காரரை கொன்றதாக அவரது நண்பரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை துரைப்பாக்கம், ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஏஜேஸ்(32). சிக்கன் கடை நடத்தி வந்த இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவரது நண்பரான ஸ்ரீதரனிடம் 20 ஆயிரம் ரூபாய் பணம் கடனாகப் பெற்றுள்ளார். அந்தப் பணத்தைத் தராததால் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி ஏஜேஸிடம் ஸ்ரீதரன் பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் ஏஜேஸை ஸ்ரீதரன் தள்ளி விட்டார். இதில் அவர் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்து ஸ்ரீதரன் சென்று விட்டார்.

இதன் பிறகு ஏஜேஸுக்குத் தலைவலி அதிகமானதால், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்குத் தலையில் ரத்தம் கட்டியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஏஜேஸ் உயிரிழந்தார். இதுகுறித்து துரைப்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in