நிலம் வாங்க வங்கியில் தந்தை வைத்திருந்த பணம்: 92 லட்சத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த மாணவன்

நிலம் வாங்க வங்கியில் தந்தை வைத்திருந்த பணம்:  92 லட்சத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த மாணவன்

நிலம் வாங்குவதற்காக தந்தை வைத்திருந்த 92 லட்ச ரூபாயை ஆன்லைன் சூதாட்டத்தில் கல்லூரி மாணவர் இழந்த சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் சீதாராம்புரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இதற்காக 5 கோடி ரூபாயை அவருக்கு இழப்பீடு தொகையாக வழங்கியது. அந்த பணத்தில் வேறு ஒரு பண்ணையை வாங்க விவசாயி முடிவு செய்தார். அதற்கு முன் பணம் செலுத்தியுள்ளார். ஏற்கெனவே அவரது வங்கிக்கணக்கில் பணம் இருந்துள்ளது.

அவரது இளையமகன் ஹர்ஷவர்தன் ரெட்டி பட்டப்படிப்பு படித்து வருகிறார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான இவர் செல்போனில் எந்நேரமும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். தனது தந்தை வங்கியில் போட்டு வைத்திருந்த 92 லட்ச ரூபாயை ஆன்லைன் விளையாட்டில் ஹர்ஷவர்தன் ரெட்டி இழந்துள்ளார்.

இந்த நிலையில் பண்ணையை வாங்குவதற்காக வங்கியில் பணம் எடுக்க மாணவரின் தந்தையான விவசாயி சென்றுள்ளார். அப்போது உங்கள் கணக்கில் பணம் இல்லையென்று வங்கியில் கூறியதால் அதிர்ச்சியடைந்தார். விசாரித்த போது ஆன்லைன் சூதாட்டத்தில் தனது இளையமகன் 92 லட்ச ரூபாயை இழந்தது அவருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து ஹர்ஷவர்த்ன் ரெட்டியின் மூத்த சகோதரர் தனது பெற்றோருடன் சென்று சைபராபாத் காவல்துறையை அணுகினார். இதையடுத்து சைபர் கிரைம் போலீஸில் விவசாயி புகார் செய்தார். தனது பணத்தை மீட்டுத்தருமாறு விவசாயி புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விவசாயி கூறுகையில்," என்னிடம் இருந்த நிலமும் போய் விட்டது. அதற்கு அரசு கொடுத்து பணமும் போய் விட்டது. எப்படி பிழைப்பது என்று தெரியவில்லை" என்று கண்ணீருடன் கூறினார். ஆன்லைன் விளையாட்டில் மாணவர் 92 லட்சத்தை இழந்த சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in