3-வது நாளாக நடக்கும் ரெய்டு... 1.90 கோடி ரொக்கப் பணம், தங்கம் பறிமுதல்: ஐடி அதிகாரிகள் அதிரடி

ஐடி ரெய்டு நடைபெற்று வரும் கிளாட்வே கிரீன் சிட்டி
ஐடி ரெய்டு நடைபெற்று வரும் கிளாட்வே கிரீன் சிட்டி

மதுரையில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் மூன்றாவது நாளாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனையில் கட்டுமான நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான செந்தில்குமாரின் வீட்டில் இருந்து 1 கோடியே 90 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மதுரையில் 20 வருடங்களாக செயல்பட்டு வரும் ஜெயபாரத் கட்டுமான நிறுவனத்தில் இன்று மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நிறுவனத்தின் பங்குதாரர்களான ஜெயக்குமார், அழகர், சரவணன், செந்தில்குமார், முருகன் உள்ளிட்டோர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனையில் நடைபெற்று வருகிறது.

டெல்லி, ஹைதராபாத், கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களிலிருந்து 36-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையின் போது கிளாட்வே கிரீன் சிட்டி பங்குதாரர் முருகன் இல்லத்திலிருந்து நேற்று நள்ளிரவு கட்டுக் கட்டாக பல கோடி ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தற்போது, மற்றொரு பங்குதாரரான செந்தில்குமார் இல்லத்திலிருந்து கிட்டத்தட்ட 1 கோடியை 90 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, உறுதியானது. பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பையை துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரின் பாதுகாப்புடன் வருமானவரித்துறை அதிகாரி ராமலிங்கம் தலைமையில் கார் மூலம் எடுத்துச் சென்றுள்ளனர்.

அதைத்தொடர்ந்து மற்றொரு பங்குதாரரான சரவணகுமார் இல்லத்திலிருந்து முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு தற்போது கார் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, செந்தில்குமார் தனது இல்லத்திலிருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட உள்ளார். அடுத்தடுத்து பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதால் சோதனை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in