சிறையில் அடைக்கப்பட்ட மகள்: பார்க்க சென்ற தாய் செய்த விபரீத செயல்

கைதான பாத்திமா மேரி
கைதான பாத்திமா மேரி

கஞ்சா வழக்கில் மதுரை மத்திய சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த மகளுக்கு, ஆடையில் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற தாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், பள்ளபட்டியைச் சேர்ந்தவர் சுசில்லா மேரி. இவர் சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் உள்ள பெண்கள் சிறை வளாகத்தில் அடைக்கப்பட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்

இந்நிலையில், சிறையில் உள்ள தனது மகளை சந்திப்பதற்காக அவரது தாய் பாத்திமா மேரி நேற்று மதுரை மத்திய சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் சிறைக்கு வந்துள்ளார். அப்போது அவரை சிறை காவலர்கள் சோதனையிட்டனர். அதில், ஆடைக்குள் 17 சிறிய பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்து கரிமேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், சட்டவிரோதமாக சிறை வளாகத்தினுள் தடைசெய்யப்பட்ட கஞ்சாவை கொண்டு செல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in