நாங்கள் ஒன்றாக இருக்கும் போது வலிமையாக இருக்கிறோம்: செஸ் ஒலிம்பியாட் விழாவில் பிரதமர் மோடி பேச்சு

நாங்கள் ஒன்றாக இருக்கும் போது வலிமையாக இருக்கிறோம்: செஸ் ஒலிம்பியாட் விழாவில் பிரதமர் மோடி பேச்சு

செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி ”தமிழ்நாட்டிற்கும் செஸ் விளையாட்டிற்கும் நெடிய வரலாற்று தொடர்பு உள்ளது. தமிழகத்திலிருந்து பல கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகி இருக்கிறார்கள் ” எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவின் நிறைவாக பிரதமர் மோடி பேசுகையில், “ சிறப்பான ஒரு தருணத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவிற்கு வந்துள்ளது. மிகக் குறைந்த காலத்தில் இந்த நிகழ்வைத் தமிழ்நாட்டில் நடத்திக்காட்டி இருக்கிறார்கள். விருந்தோம்பலுக்குச் சிறந்த மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டிற்கும் செஸ் விளையாட்டிற்கும் நெடிய வரலாற்றுத் தொடர்பு உள்ளது. தமிழகத்திலிருந்து பல கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகி இருக்கிறார்கள். உலகத்தின் தொன்மையான மொழி தமிழ். சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெறும் இந்த விழாவிற்கு வருபவர்கள் தமிழர்களின் தொன்மையான அடையாளங்களைக் கண்டறியலாம். இந்த விளையாட்டின் மூலமாக ஒரு முக்கிய செய்தியைச் சொல்ல இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இருக்கும் போது வலிமையானவர்களாகவும், சிறந்தவர்களாகவும் இருக்கிறோம். பல விளையாட்டுப் போட்டிகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன. இந்தியாவின் விளையாட்டு கலாச்சாரம் மேம்பட்டுள்ளது. கிராமங்கள், நகரங்களில் உள்ள நமது வீரர்கள் வெற்றிகளை ஈட்டும் காலம் தொடங்கிவிட்டது ” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in