வெயில் அதிகமாக இருப்பதால் அதிகம் தண்ணீர் குடியுங்கள்... நாட்டு மக்களுக்கு மோடி வேண்டுகோள்!

வாக்களிக்கும் பிரதமர் நரேந்திர மோடி
வாக்களிக்கும் பிரதமர் நரேந்திர மோடி

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களவை மூன்றாம் கட்டத் தேர்தலையொட்டி குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல்

குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் 25 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குஜராத்தில் உள்ள 50,788 வாக்குச் சாவடிகளில் 2.56 கோடி ஆண்கள், 2.41 கோடி பெண்கள் மற்றும் 1,534 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 4.97 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். நகர்ப்புறங்களில் 17,275 வாக்குச் சாவடிகளும், கிராமப்புறங்களில் 33,513 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்ட்டுள்ள என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தனது சொந்த மாநிலமான குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப்பள்ளியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன், அமித் ஷா.
பிரதமர் நரேந்திர மோடியுடன், அமித் ஷா.

இதன் பின் மோடி செய்தியாளர்களிடம் கூறுகையில், உலகில் ஜனநாயக நாடுகளுக்கு உதாரணமாக இந்தியாவின் தேர்தல் நடைமுறை உள்ளது. ஜனநாயகத்தைக் கொண்டாடுவது போல தேர்தல் அமைந்துள்ளது. இந்த ஆண்டு நாட்டு மக்கள் அனைவரும் பெருமளவில் திரண்டு வந்து வாக்கு செலுத்த வேண்டும். ஜனநாயகத் திருவிழாவைக் கொண்டாட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் அவர் கூறுகையில்," வெயில் அதிகமாக இருப்பதால் மக்கள் அதிகம் தண்ணீர் அருந்த வேண்டும்" என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் வருகை தந்திருந்தார். இதனையொட்டி நிஷான் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in