ஞானவாபி மசூதியில் நவீன முறையில் ஆய்வு... உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

ஞானவாபி மசூதி மற்றும் காசி விஸ்வநாதர் கோயில்
ஞானவாபி மசூதி மற்றும் காசி விஸ்வநாதர் கோயில்

வாரணாசியின் உள்ள ஞானவாபி மசூதியில் 6வது நாளாக தொல்லியல் துறை ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், மசூதியில் நடக்கும் தொல்லியல் ஆய்வு குறித்த போலி செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி சிவன் கோயிலை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்றும் அங்குள்ள தெய்வங்களை குறிப்பிட்ட நாட்களில் மட்டுமின்றி, ஆண்டுதோறும் வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்று ஞானவாபி மசூதியில் கட்டிடத்துக்கு சேதம் ஏற்படுத்தாமல் ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனால் தொல்லியல் துறை அதிகாரிகள் ரேடார் மூலம் நவீன முறையில் இன்று ஆய்வு செய்தனர். இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது.

ஞானவாபி மசூதி
ஞானவாபி மசூதி

தொல்லியல் ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்து மதக் கட்டமைப்புகள்/படங்கள்/வடிவமைப்புகள் பற்றிய போலியான அறிக்கைகளை தடைசெய்ய உத்தரவிடுமாறுக் கோரி மசூதி குழு நீதிமன்றத்தை அணுகியது. இதனையடுத்து ஞானவாபி மசூதி வளாகத்தில் நடைபெற்று வரும் இந்திய தொல்பொருள் ஆய்வு தொடர்பான அனைத்து வகையான ஊடக அறிக்கைகளுக்கும் வாரணாசி நீதிமன்றம் தடை விதித்து இன்று உத்தரவிட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in