டாக்டரை சரமாரியாக தாக்கிய முதல்வரின் மகள்: வீடியோ வெளியாகி பரபரப்பு

டாக்டரை சரமாரியாக தாக்கிய முதல்வரின் மகள்: வீடியோ வெளியாகி பரபரப்பு

மிசோரம் மாநில முதல்வராக இருப்பவர் சோரம் தங்கா. இவரது மகள் மிலோரி. இவர் தலைநகர் அய்சாலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று சென்றுள்ளார். அப்போது, அவர் முன்பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவரை சந்திக்க டாக்டர் மறுத்துவிட்டதோடு, முன்பதிவு செய்துவிட்டு ஆலோசனை பெற வாருங்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த முதல்வரின் மகள் மிலோரி, மருத்துவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடைய, தனது மகளின் செயலுக்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக முதல்வர் சோரம் தங்கா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in