செல்லப்பிராணியை காணவில்லையா... அதற்கும் கை கொடுக்கிறது 'ஸ்விக்கி'!

ஸ்விக்கி உணவு விநியோகிக்கும் நபர்
ஸ்விக்கி உணவு விநியோகிக்கும் நபர்

காணாமல் போன செல்லப்பிராணிகளை கண்டறிய பிரபல ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான 'ஸ்விக்கி' புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரபல ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான 'ஸ்விக்கி', செல்லப் பிராணிகள் காணாமல் போனால் அதனை கண்டறிய உதவும் வகையில் தனது தளத்தில் 'ஸ்விக்கி பாவ்லீஸ்' என்ற வசதியை துவங்கியுள்ளது. தேசிய செல்லப்பிராணிகள் தினத்தை (ஏப்ரல் 11) முன்னிட்டு, ஸ்விக்கி இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், 'பாவ்-டெர்னிட்டி' கொள்கையை அறிமுகப்படுத்துவதன் மூலம் செல்லப்பிராணி பராமரிப்பு, தத்தெடுப்பு ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதாகவும் ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது.

செல்லப் பிராணிகள்
செல்லப் பிராணிகள்

இது தொடர்பாக ஸ்விக்கி உணவு சந்தைப்படுத்துதல் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி ரோஹித் கபூர் கூறுகையில், "ஒரு செல்லப்பிராணி வளர்ப்பாளராக செல்லப்பிராணியைக் காணவில்லை என்றால் ஏற்படும் கவலையையும், வேதனையையும் நான் முதலில் புரிந்துகொள்கிறேன்.

இதுபோன்ற ஒரு துன்பகரமான நிகழ்வு எந்தவொரு செல்லப்பிராணி வளர்ப்போருக்கும் ஒருபோதும் ஏற்படக் கூடாது. அவ்வாறு நடந்தால், அவர்களுக்கு உதவ நம்பகமான ஆதாரமாக இருக்க 'ஸ்விக்கி பாவ்லீஸ்' தயாராக உள்ளது" என்றார்.

ஸ்விக்கி புதிய முயற்சிகளின் கீழ், செல்லப்பிராணி காணாமல் போய்விட்டால், அதன் உரிமையாளர், ஸ்விக்கி செயலி மூலம் நேரடியாகப் புகாரளிக்கலாம்.

ஸ்விக்கி ஊழியர்கள்
ஸ்விக்கி ஊழியர்கள்

தேவையான அனைத்து விவரங்கள், படங்களை ஸ்விக்கி ஆப்பில் சம்பந்தப்பட்ட பிரிவின் கீழ் பதிவிட வேண்டும். காணாமல்போன செல்லப் பிராணிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட டெலிவரி பார்ட்னர்கள் பங்களிப்பார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ஆர்டர்களை விநியோகிக்கும்போதோ அல்லது ஆர்டர்களுக்கு இடையில் ஓய்வெடுக்கும் போதோ தங்களின் நேரத்தை பயனுள்ளதாக செலவிடுவதால், ஸ்விக்கியின் டெலிவரி பார்ட்டனர்களின் உதவி தனித்துவமானதாக நிலை நிறுத்தப்படுகிறது.

செல்லப் பிராணிகள் மாயமானால் புகாரளிக்க ஸ்விக்கி வசதி
செல்லப் பிராணிகள் மாயமானால் புகாரளிக்க ஸ்விக்கி வசதி

டெலிவரி பார்ட்டனர்களின் செயல்பாடு விலை மதிப்பற்றதாக நிரூபிக்கப்பட்ட பல நிகழ்வுகள் உள்ளது. மேலும், தேவைப்படு வோருக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டவும் இது வழிவகுக்கிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது... ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பரபரப்பு!

ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய பெண் மீது பாஜகவினர் தாக்குதல்... திருப்பூரில் பரபரப்பு; அதிர்ச்சி வீடியோ!

தெலங்கானாவில் இருந்து ரயிலில் போதை மாத்திரைகள் கடத்தல்... சென்னையில் 3 பேர் கைது!

ப்ளீஸ்... இதையாவது செய்யுங்க... ரஜினிக்கு நெருக்கடி தரும் பாஜக!

குடியால் நேர்ந்த சோகம்...30 வயதில் அகால மரணம் அடைந்த பிரபல பாடகி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in