`சிறந்த நண்பரை மிஸ் செய்கிறேன்'- வார்னே நினைவு நாளில் சச்சின் உருக்கம்

வார்னே -சச்சின்
வார்னே -சச்சின்`சிறந்த நண்பரை மிஸ் செய்கிறேன்'- வார்னே நினைவு நாளில் சச்சின் உருக்கம்

"ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாது சிறந்த நண்பராகவும் உங்களை நான் மிஸ் செய்கிறேன்" என்று ஷேன் வார்னேவின் முதலாமாண்டு நினைவு நாளில் இந்திய கிரிக்கெட் சச்சின் டெண்டுல்கர் உருக்கமாக கூறியுள்ளார்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிவிட்டது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 1992 முதல் 2007 வரையில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் வார்னே விளையாடினார். 145 டெஸ்ட் மற்றும் 194 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். மொத்தமாக 1001 விக்கெட்டுகளை சர்வதேச கிரிக்கெட்டில் அவர் கைப்பற்றினார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி உருக்கமான கடிதம் வழியே நினைவுகளை பகிர்ந்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், மற்றொரு ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர்.

தனது ட்விட்டர் பக்கத்தில், “களத்தில் நாம் இருவரும் சமர் செய்துள்ளோம். அதே அளவிற்கு களத்திற்கு வெளியிலும் நமது நட்புறவு தொடர்ந்தது. ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாது சிறந்த நண்பராகவும் உங்களை நான் மிஸ் செய்கிறேன். உங்கள் நகைச்சுவை உணர்வின் ஊடாக சொர்க்கத்தை அழகான இடமாக நீங்கள் மாற்றி இருப்பீர்கள் என நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in