திருமணமான 2 மாதத்தில் 17 பவுன் நகையுடன் ஓட்டம்: காதல் மனைவியால் கணவன் அதிர்ச்சி

திருமணமான 2 மாதத்தில் 17 பவுன் நகையுடன் ஓட்டம்: காதல் மனைவியால் கணவன் அதிர்ச்சி

சென்னையில் காதல் திருமணமான 2 மாதங்களில் வீட்டில் இருந்த 17 பவுன் நகை, 20 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு தலைமறைவான மனைவி குறித்து கணவன் போலீஸில் புகார் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரத்தில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்தார். அவருடன் அந்த பேக்கரியில் வேலை செய்தவர் அபிநயா(28). அப்போது இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின் அதுவே காதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் அபிநயாவை நடராஜன் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் வீட்டில் இருந்த 17 பவுன் நகை, 20 ஆயிரம் ரூபாயுடன் திடீரென அபிநயா தலைமறைவாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நடராஜன், அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். ஆனால், அபிநயாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், தன் மனைவியைக் கண்டுபிடித்து தருமாறு தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அபிநயாவைத் தேடி வருகின்றனர். திருமணமான இரண்டே மாதங்களில் காதல் கணவனை விட்டு விட்டு நகையுடன் புதுப்பெண் மாயமான சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in