மனைவி தற்கொலை முயற்சியால் அம்பலமான மைனர் திருமணம்: சிக்கிய கணவர், மாமனார், மாமியார்!

மனைவி தற்கொலை முயற்சியால் அம்பலமான மைனர் திருமணம்: சிக்கிய கணவர், மாமனார், மாமியார்!

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி தற்கொலைக்கு முயன்றார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தபோதுதான் மைனர் பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கணவர் உள்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம், சின்ன உலகாணியில் சிறுமி ஒருவர் 12-ம் வகுப்பு படித்துவந்தார். அவருக்கும் கேரள மாநிலம், வண்டிப் பெரியாறு பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் ராஜா(27) என்பவருக்கும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து சிறுமி கர்ப்பமானார். இந்நிலையில் அவரது கணவர் ராஜாவோடு, கருத்து முரண்பாடு ஏற்பட்டு சிறுமி பெற்றோர் வீடான சின்ன உலகாணிக்கு வந்துவிட்டார்.

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் அவரிடம் கணவருடன் சேர்ந்து வாழ வற்புறுத்தினர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் விஷம் அருந்தினார். நான்கு மாதங்கள் கர்ப்பமாகவும் இருந்த சிறுமியை மருத்துவமனையில் அட்மிட் செய்தபோதுதான் 18 வயதை விடக் குறைவானர் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து மருத்துவர்கள் கள்ளிக்குடி சமூகநலத்துறை அலுவலர் ரூபி அருள்மணியிடம் புகார் கொடுத்தனர். ரூபி அருள்மணி இதுகுறித்து திருமங்கலம் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து போலீஸார், சிறுமியின் பெற்றோர், அவரது கணவர் ராஜா, சிறுமியின் பெற்றோர் சந்திரபோஸ், பேச்சியம்மாள் உள்பட 5 பேர் மீதும் மைனர் பெண்ணிற்கு திருமணம் செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in