உயிரை மாய்த்துக் கொண்ட அமைச்சரின் மருமகள்!- காரணத்தை கண்டறிய தடயவியல் சோதனை

உயிரை மாய்த்துக் கொண்ட அமைச்சரின் மருமகள்!- காரணத்தை கண்டறிய தடயவியல் சோதனை
சவிதா, தற்கொலை

மத்தியப் பிரதேச மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் என்பவரின் மருமகள் சவிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 மத்திய பிரதேச கல்வி அமைச்சர் இந்தர் சிங்
மத்திய பிரதேச கல்வி அமைச்சர் இந்தர் சிங்

மத்திய பிரதேசம், ஷாஜாபூரில் கல்வி அமைச்சர் இந்தர் சிங்கின் மருமகள் சவிதா வசித்து வருகிறார். இவருக்கும் இந்தர் சிங்கின் மகன் தேவ்ராஜ் சிங் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் நேற்று அவர் ஷாஜாபூரில் உள்ள தனது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து சவிதாவின் உடல் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்கான காரணங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனிலும் குடும்ப சூழல் காரணமாக இருக்கலாம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலை சம்பவத்தின் போது அமைச்சர் போபாலிலும், சவிதாவின் கணவர் தேவ்ராஜ் அருகில் உள்ள கிராமத்திற்கும் சென்றிருக்கிறார்கள். தடயவியல் சோதனைக்குப் பிறகு விசாரணை தீவிரப்படுத்த உள்ளதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.