தலைகுப்புற கவிழ்ந்த அரசுப் பேருந்து: ஓடோடிச் சென்று மீட்புப் பணியில் இறங்கிய அமைச்சர்

கவிழ்ந்து கிடக்கும் பேருந்தில் இருந்து வெளியேறும் பயணிகள்
கவிழ்ந்து கிடக்கும் பேருந்தில் இருந்து வெளியேறும் பயணிகள்

விருத்தாசலம் அருகே எதிர்பாராத விதமாக தலைக்குப்புற கவிழ்ந்த அரசு பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்களோடு அவ்வழியாக வந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரும் இணைந்து  மேற்கொண்டார்.

கடலூர் மாவட்டம், வேப்பூரிலிருந்து இன்று காலையில் விருத்தாசலம் நோக்கி வந்த அரசுப் பேருந்து ஒன்று    எதிர்பாராவிதமாக விபத்துக்குள்ளாகி வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பேருந்தில்  இருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் பலத்த காயம் அடைந்தனர்.  அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஓடிவந்து பேருந்தில்  சிக்கியிருந்தவர்களை  மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அவ்வழியே சென்ற போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர் தகவல் தெரிந்து உடனடியாக காரைவிட்டு இறங்கி, பாதிக்கப்பட்டவர்களை  மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மருந்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.  சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக அங்கிருந்து அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பிறகு அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டார். 

காயமடைந்த 40க்கும் மேற்பட்டோர் வேப்பூர் மற்றும் விருத்தாசலம் அரசு மருத்துவமனைகளில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு  மருத்துவர்களுக்கு  உத்தரவிட்டார். பொதுமக்கள் ஆபத்தில் சிக்கியிருந்தபோது உடனடியாக களமிறங்கி மீட்பு பணியில் ஈடுபட்ட அமைச்சரின் செயலை பொதுமக்கள் பாராட்டினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in