போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு விரைவில் பணப்பலன்: அமைச்சர் சிவசங்கர்

போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு விரைவில் பணப்பலன்: அமைச்சர் சிவசங்கர்

``போக்குவரத்துத்துறையில் நிதிச்சுமை இருப்பினும்  நிதிநிலைக்கு ஏற்ப விரைவில்  அனைவருக்கும் படிப்படியாக பணப்பலன்கள் வழங்கப்படும்'' என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்லவன் இல்லத்தில் இன்று  நடைபெற்ற  நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான  வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு தொகை உள்ளிட்ட பணப்பலன்  காசோலைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் அவர்  பேசியதாவது,  "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த மே 2020-ம் ஆண்டு முதல் மார்ச் 2021-ம் ஆண்டு  வரை பணிபுரிந்து விருப்பு ஓய்வு பெற்ற பணியாளர்கள், அதே போன்று இறந்த பணியாளர்கள் என மொத்தமாக 1241 தொழிலாளர்களுக்கு இன்று  தமிழகம் முழுவதும் நடைபெறும்  நிகழ்ச்சிகளில் இந்த காசோலைகள் வழங்கப்படுகிறது.

டீசல் விலை உயர்வு இருந்த போதும் பேருந்து கட்டணம் உயர்த்தபடவில்லை. போக்குவரத்துத்துறையில் ஏற்கெனவே நிதிச்சுமை உள்ளது. இருப்பினும் மீதம் உள்ளவர்களுக்கு  நிதி நிலைக்கு ஏற்ப படிப்படியாக பணப்பலன்கள் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில்  22 பேருக்கு காசோலையை நேரடியாக வழங்கினார். அதோடு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் சார்பாக "மிஷன் சென்னை" என்னும்  திட்டத்தின் கீழ் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ வாகன சேவையை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in