சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவார்கள்: அமைச்சர் ரோஜா ஆரூடம்!

நடிகை ரோஜா
நடிகை ரோஜா

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், லோகேஷ், ஷர்மிளா ஆகியோர் வரவிருக்கும் தேர்தல்களுக்கு பிறகு முகவரி இல்லாத அரசியல்வாதிகளாக மாறிவிடுவார்கள் நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் மாநில மெகா விளையாட்டு போட்டி நேற்று நடந்தது. இதில் அமைச்சரும், நடிகையுமான ரோஜா பங்கேற்று தொடங்கி வைத்து பேசினார்.  அப்போது அவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட ஆந்திர மாநில அரசியல்வாதிகளை கடுமையாக தாக்கி பேசினார். 

அப்போது, "சந்திரபாபு, பவன் கல்யாண், லோகேஷ், ஷர்மிளா ஆகியோர் வரவிருக்கும் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களுக்குப் பிறகு ஆந்திராவில் முகவரி இல்லாத அரசியல்வாதிகளாக மாறிவிடுவார்கள்.

அதன் பிறகு அவர்கள் அனைவரும் தெலங்கானாவுக்கு படையெடுப்பது உறுதி. ஷர்மிளா இப்போது எந்த கட்சியில் இருக்கிறார் என்பதை யோசிக்க வேண்டும்.ஜெகன்மோகனை சிறையில் அடைத்த காங்கிரஸுடன் அவர் கைகோர்த்துள்ளார்.

ரோஜா
ரோஜா

ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலத்தில்  தெலங்கானாவில் உள்ள ரேவந்த்ரெட்டி அரசிடம் இருந்து ஆந்திராவுக்கு வழங்க வேண்டிய பாக்கி ₹6000 கோடியையும்  ஷர்மிளா வாங்குவாரா?

தெலுங்கானாவில் போட்டியிட அம்மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஷர்மிளா திடீரென காங்கிரசுடன் கைகோர்த்தது ஏன்? ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இப்போது உயிரோடு இருந்திருந்தால் அவர் இப்போதும் காங்கிரஸை விமர்சித்திருப்பார்.

தன்னை விட இளையவரான அமித் ஷாவின் கால்களை சந்திரபாபு பிடித்திருப்பது வெட்கக்கேடானது. ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஆசையில் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறார். சந்திரபாபு தற்போது தரம் தாழ்ந்த அரசியல் செய்து வருகிறார்" என்று அமைச்சர் ரோஜா பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in