ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு!- காரணம் இதுதான்

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு!- காரணம் இதுதான்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருந்து பற்றாக்குறை உள்ளதாக வெளியான தகவலை அடுத்து அந்த மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆசியாவின் மிகப் பெரிய அரசு மருத்துவமனையான ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கும், உள் நோயாளிகளுக்கும் தேவையான மருந்துகள் கிடைப்பதில்லை என அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. இது குறித்து தினசரி பத்திரிகைகளிலும் செய்திகள் வந்தன.

இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு திடீர் ஆய்வு செய்ய சென்றார். இதனால் மருத்துவமனை வட்டாரமே பரபரப்பானது. முதலில் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு சென்ற அவர் அங்குச் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு எந்த மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன எனக் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து ஐசியு பிரிவிற்குச் சென்று அங்கு ஆய்வு நடத்திய அமைச்சர் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது மருத்துவர்கள் தங்களை அலைக்கழிப்பதாக நோயாளிகள் சிலர் தெரிவித்தனர். பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த பிறகு மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி மருந்துகள் இருப்பு விவரங்களைக் கேட்டறிந்தார். அமைச்சரின் திடீர் விசிட்டால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in