என்ன திட்டம் அறிவிக்கப்பட வேண்டும்? - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆலோசனை

என்ன திட்டம் அறிவிக்கப்பட வேண்டும்? - மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் ஆலோசனை

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் 2023-24-ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்த கலந்தாலோசனை கூட்டம் அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் இன்று கோவையில்  நடைபெற்றது.

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில் 2023-24-ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில்  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை நிறுவனர்கள், அரசு மருத்துவ பணியாளர்கள், அரசு மருத்துவத்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட  பலரும் கலந்து கொண்டு அவர்களது கருத்துக்களை முன்வைத்தனர். முன்னதாக இத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் இதற்கு முன்பு மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்தும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தினர் தெரிவித்த  கருத்துக்கள் அனைத்தும்  இத்துறை அலுவலர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை பரிசீலிக்கப்பட்டு  மானிய கோரிக்கையின் போது  அறிவிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in