சென்னை மெரினா சாலையில் விபத்துக்குள்ளான இளைஞர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தன்னுடைய காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினா சாலையில் நடந்த விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் அந்த வழியாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காரை நிறுத்தி விபத்து குறித்து கேட்டறிந்தார். அத்துடன் படுகாயம் அடைந்த இளைஞர்களைத் தனது காரில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர், ‘’ படுகாயம் அடைந்த இளைஞர்களை மருத்துவமனையில் சேர்த்தோம், அவர்கள் இருவரையும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் காப்பாற்றியுள்ளனர் அவர்களுக்கு எனது நன்றிகள்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.