சட்டவிரோதமாக சுரங்கத்தில் கனிமவளக்கொள்ளை: ஆய்வுக்குச் சென்ற டிஎஸ்பி டிரக்கை ஏற்றி கொடூரக்கொலை

சட்டவிரோதமாக சுரங்கத்தில் கனிமவளக்கொள்ளை: ஆய்வுக்குச் சென்ற டிஎஸ்பி டிரக்கை ஏற்றி கொடூரக்கொலை

சட்டவிரோத சுரங்கத்தில் சோதனைக்குச் சென்ற இடத்தில் டிஎஸ்பியை டிரக்கை ஏற்றிக் கொலை செய்த சம்பவம் ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் மேவாட் பகுதியில் உள்ள நூஹ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிமவள சுங்கரம் நடத்தப்பட்டு வருகிறது.. இதுகுறித்து டிஎஸ்பி சுரேந்திரசிங் பிஷ்னோய் ஆய்வு செய்ய நேற்று சென்றுள்ளார்.

அப்போது சுரங்கத்தில் இருந்து அதிக அளவு கற்களை ஏற்றிக் கொண்டு டிரக் வந்துள்ளது. அவ்வழியாக வந்த பிஷ்னோய், டிரக்கை மெதுவாகச் செல்லும்படி கூறியுள்ளார். அப்போது டிரக்கை ஓட்டி வந்த ஓட்டுநர், வேகமாக பிஷ்னோய் மீது வாகனத்தை மோதியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுரேந்திரசிங் பிஷ்னோய் உடல் நசுங்கி பலியானார். உடனடியாக டிரக்கை ஓட்டி வந்தவர் தப்பியோடி விட்டார். பாஜக ஆட்சி நடைபெறும் ஹரியானாவில் கனிம வளக்கொள்ளை அதிகரித்து விட்டதாவும், இதைத்தடுப்பவர்கள் கொலை செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து ஹரியானா காவல்துறை ட்விட்டர் பக்கத்தில் பிஷ்னோய் கொலைக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது, கடமைக்காக உயிரை விட்ட பிஷ்னோய் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தப்ப முடியாது என்று சுரங்கத்துறை அமைச்சர் மூல்சந்த் சர்மா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் பிஷ்னோய் ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in