அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதி விபத்து: பால் வியாபாரி பலி

அதிவேகமாக வந்த  ஆம்புலன்ஸ் மோதி விபத்து: பால் வியாபாரி பலி

விபத்து ஏற்பட்டால் அவசர மீட்பிற்கு வரும் 108 ஆம்புலன்ஸ் மோதி, பால் வியாபாரி ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், நல்லமங்கலம் கணபதிநாடார் தெருவைச் சேர்ந்தவர் தர்மர்(51) பால் வியாபாரியான இவர் தனது ஊரில் இருந்து ராஜபாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தளவாய்புரம் விலக்கு அருகே இவர் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாகச் சென்ற 108 ஆம்புலன்ஸ் தர்மர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தர்மர் தூக்கி வீசப்பட்டார். அப்போது அங்கு இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த தர்மரின் அண்ணன் விஜயன் தர்மரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தர்மர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சேத்தூர் புறக்காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து 108 ஆம்புலம்ஸை ஓட்டிவந்த ராஜபாளையம், ரெட்டியபட்டியை சேர்ந்த தர்மலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in