அந்தமான் அருகே வங்கக் கடலில் நிலநடுக்கம்!

அந்தமான் அருகே வங்கக் கடலில் நிலநடுக்கம்!

அந்தமான் அருகே வங்கக்கடலில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதில் யாருக்கும் காயமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் நிக்கோபர் தீவுக்கு அருகே வங்கக் கடலில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து 302 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 40 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. தேசிய நில அதிர்வு மையத்தின் அறிக்கையின்படி இந்த நிலநடுக்கம் 4.6 ரிக்டர் அளவாகப் பதிவாகி இருந்தது.

வழக்கமாகக் கடலுக்கு அடியில் பெரிய அளவில் நிலநடுக்கம் உணரப்படும்போது சுனாமி எச்சரிக்கை விடப்படுவது வழக்கம். ஆனால் 5 ரிக்டருக்கும் குறைவான அளவிலேயே நிலநடுக்கம் உணரப்பட்டதால் இது ஆபத்து ஏதும் நிகழ்ந்தாத நில அதிர்வாகவும் தேசிய நில அதிர்வு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in