மாஸ் வீடியோ... சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்கும் மைக் டைசன்!

மைக் டைசன்
மைக் டைசன்

பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ’Bunny - Man’ (முயல் மனிதன்) என்ற சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு இத்தாலியில் நடைபெறவுள்ளது.

முன்னாள் ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பினான மைக் டைசன் ’பன்னி - மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இது தொடர்பாக இத்தாலியின் டூரினில் செய்தியாளர்களைச் சந்தித்த படக்குழுவினர் இந்தத் தகவலை தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின் போது டைசனுடன் இத்தாலிய தயாரிப்பாளர் ஆண்ட்ரியா இர்வோலினோ மற்றும் எழுத்தாளர் என்ரிகோ ரெம்மெர்ட் ஆகியோரும் உடன் இருந்தனர். இது முற்றிலும் இத்தாலியின் டூரின் நகரில் படமாக்கப்படும்.

'பன்னி-மேன்' படத்தின் கதை ஒரு கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த இளைஞர் பற்றியது. சூப்பர் ஹீரோவான அவர் முயல் முகமூடியை அணிந்து கொடியவர்களை தாக்கி அழிக்கிறார். அதன் மூலம் அவர் சூப்பர் ஹீரோவாக கொண்டாடப்படுகிறார் எதிர்பாராமல் நடக்கும் ஒரு வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்படும் ஹீரோவின் சகோதரி தற்கொலை செய்துகொள்கிறாள். அதன் தாக்கத்திலேயே துஷ்டர்களை அழிக்கும் அவதார புருஷனாக அவதாரம் எடுக்கிறார் ஹீரோ.

மைக்கேல் மன்னின் 'ஃபெராரி', ஜானி டெப் நடித்த 'வெயிட்டிங் ஃபார் தி பார்பேரியன்ஸ்', 'லம்போர்கினி: தி மேன் பிகைண்ட் தி லெஜண்ட்' ஆகிய படங்களை தயாரித்த இர்வோலினோ இப்படத்தை தயாரிக்கிறார்.

"படத்திம் 95 சதவீத காட்சிகள் மெய்நிகர் செட்டில் படமாக்கப்படும்" என்று இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் இர்வோலினோ. “இந்தப் படத்தின் மூலம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் குறிக்கோளுடன் ஒளிப்பதிவு, இயக்கத்தை கையாளவிருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "மைக் டைசன் போன்ற ஒரு ஜாம்பவானும் இந்தப் படத்தில் நடிப்பதை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்தப் படத்தை மேலும் சிறப்பானதாக கொண்டுவர அவரும் எங்களுக்கு உதவுவார்" என்றார். இருப்பினும், இந்தப் படத்தில் மைக் டைசனின் கதாபாத்திரம் குறித்து தயாரிப்பாளர் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. அதேபோல் இந்தப் படத்தை இயக்கப் போவது யார் என்ற விவரத்தையும் ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.


மைக் டைசன் இதற்கு முன்பு 'தி ஹேங்கோவர்', 'தி ஹேங்கோவர் பார்ட் 2' போன்ற படங்களில் குத்துச் சண்டை வீரராகவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in