30 ஆண்டுகள் நாட்டுக்காக சேவை... மிக்-21 பைசன் விமானங்களுக்கு பிரியா விடை!
சுமார் 30 ஆண்டுகளாக இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வந்த மிக் 21 ரக போர் விமானங்கள் கடைசி முறையாக ராஜஸ்தான் மாநிலத்தில் பறந்து தங்கள் பணியை நிறைவு செய்தன.
கடந்த 1965ம் ஆண்டு சோதனை முறையில் இந்திய விமானப்படையில் மிக் 21 ரக விமானங்கள் இணைக்கப்பட்டன. 1970 முதல் 2000ம் ஆண்டு பாதி வரை இந்திய விமானப்படையின் முதுகெலும்பாக இந்த வகை விமானங்கள் இருந்து வந்தன.
இதைத்தொடர்ந்து சுகோய்-30 ரக விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டு பிரதானமாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக மிக் 21 ரக விமானங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன.

இந்த விமானங்களை ஓய்வு பெற வைத்துவிட்டு நவீனரக விமானங்களை இந்திய விமானப்படையில் சேர்ப்பது தொடர்பாக தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் ரக விமானங்களை, இந்திய விமானப்படையில் இணைப்பதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் பயன்பாட்டில் இருந்து வந்த பைசன்-21 ரக விமானங்கள் ஓய்வு பெறும் நிகழ்ச்சி ராஜஸ்தானில் நடைபெற்றது.

கடைசி முறையாக பைசன்-21 ரக போர் விமானங்கள் பார்மர் நகருக்கு மேலாக பறந்து ஓய்வு பெற்றன. ஐஏஎஃப்-4 ஸ்குவாட்ரனுக்கு சுகோய்-30 எம்கேஐ ரக விமானங்கள் வழங்கப்பட உள்ளது.
கடந்த 2019 ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி பாகிஸ்தானின் அதிநவீன எஃப் 16 ரக விமானத்தை இந்தியாவின் அபிநந்தன் வர்த்தமான், பைசன் 21 ரக விமானத்தில் இருந்தபடி சுட்டு வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை!
பகீர்... 81 கோடி இந்தியர்களின் ஆதார் தரவுகள் விற்பனை... சிபிஐ விசாரணை!
இன்றே கடைசி தேதி... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
மைதானத்தில் வீராங்கனைக்கு முத்தமிட்ட விவகாரம்... லூயிஸுக்கு 3 ஆண்டுகள் தடை!