நள்ளிரவு முதல் அதிகாலை வரை துப்பாக்கிச்சண்டை: காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

நள்ளிரவு முதல் அதிகாலை வரை  துப்பாக்கிச்சண்டை: காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை நடைபெற்ற மோதலில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீஸார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீஸாருடன் இணைந்து நேற்று நள்ளிரவு அப்பகுதியில் வீடு, வீடாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென அங்கு தங்கியிருந்த பயங்கவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்குப் பதிலடி தரும் வகையில் பாதுகாப்பு படையினரும் திருப்பிச் சுட்டனர். இன்று அதிகாலை வரை இந்த மோதல் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். என்கவுன்டர் நடந்த பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்பதால் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in