நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

நள்ளிரவில் ஏற்பட்ட திடீர்  நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

உத்தராகண்ட் மாநிலத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலியாயினர். ஒருவர் படுகாயமடைந்தார்.

உத்தரகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டம் பிந்தர் பள்ளத்தாக்கில் உள்ள பைங்கர் கிராமத்தில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மீது பாறைகள் விழுந்தன.

தகவல் அறிந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி புதைந்து கிடந்தனர். இதில் 2 பெண்கள் உள்பட நான்கு பேர் உடல் நசுங்கி பலியாகியிருந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டார்.

இந்த விபத்து நள்ளிரவில் நடந்ததாக தரலி துணைப் பிரிவு நீதிபதி ரவீந்திர குமார் ஜுவந்த கூறியுள்ளார். காயமடைந்தவர் உடனடியாக மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், வேறு யாரும் அப்பகுதியில் நிலச்சரிவில் சிக்கியுள்ளனரா என்று தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in